அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடித்து வருகிறார். #Thalapathy63 #Vijay
விஜய் படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை
பதிவு: ஏப்ரல் 15, 2019 12:58
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான கால்பந்து விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார் விஜய். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு பயிற்சிகள் எடுத்து, நடித்து வருகிறார்.
நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார். #Thalapathy63 #Vijay #Nayanthara #Kathir #Indhuja
Related Tags :