சினிமா

தேர்தலில் விஜய் படம், கொடியை பயன்படுத்த தடை

Published On 2019-04-12 02:55 GMT   |   Update On 2019-04-12 02:55 GMT
தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் விஜய்யின் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #Vijay
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 2004-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றிய விஜய் அதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.

ஒரு அரசியல் கட்சிக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்துக்கு மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் வலுவான அமைப்பாக மாறி இருக்கிறது.



நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் குதித்துள்ளார். ரஜினிகாந்த் நதிநீர் இணைப்பை செயல்படுத்தும் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். நடிகர் விஜய் ஆதரவு யாருக்கு? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிகர்கள் பயன்படுத்த கூடாது என்றும், பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்மன்ற நிர்வாகிகள் மூலம் இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News