search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வானியல் சாஸ்த்திரத்தில் சூரியன்
    X

    வானியல் சாஸ்த்திரத்தில் சூரியன்

    சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்!

    சுயமாக ஒளியையும், வெப்ப ஆற்றலையும் உமிழும் கோளம் சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு

    14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்! சூரியன் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஆகும் காலம் 25.38 நாட்களாகும்.

    சூரியனின் இயக்க வேகம் வினாடிக்கு 20 கிலோ மீட்டர் ஆகும். இதன் இயக்கப் பயணத்தில் தன்னுடன் சார்ந்த பூமி பிற கோள்களையும், விண்மீன்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது!

    சூரியன் தனது "ஈர்ப்புச் சக்தியால்" பிற கோள்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவைகளை ஒரே சீரான நீள்வட்ட பாதையில் இயங்க வழிவகை செய்கிறது.

    விஞ்ஞானத்தில் சூரியன்:

    சூரியனில் நிகழும் "அணுக்கரு இணைவு" வினைதான் அதன் நீண்டகால ஒளி உமிழ் ஆற்றலையும், தீராத வெப்ப ஆற்றலையும் தரக் காரணமாக இருக்கிறது.

    சூரியனின் நிறமாலைகள்:

    சூரியனின் ஒளிக்கதிரை முப்பட்டகம் ஒன்றின் வழியாக பாய்ச்சப்படும் போது அது ஏழு வண்ண ஒளிகளாக பிரிகை அடைகிறது.

    இந்த வண்ணங்களின் தொகுப்பே சூரிய நிறமாலை எனப்படுகிறது.

    Next Story
    ×