search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?
    X

    வாட்ஸ்அப் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

    உங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இருந்து தப்பிக்க அவற்றை பிளாக் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என இரண்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புகள் மேற்கொள்ள செய்யும் வசதியில் நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்கத் தான் செய்கின்றது. 

    அடிக்கடி வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் ஒரு கட்டத்தில் நம்மை கடுப்பாக்கி விடும். உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கின்றது. 

    மொபைல் போன்களில் உங்களுக்கு பிடிக்காதவர்களை முழுமையாக பிளாக் செய்வதை போன்றே வாட்ஸ்அப்பிலும் உங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பவரை பிளாக் செய்ய முடியும். 

    இவ்வாறு பிளாக் செய்தால் அவர்களிடம் இருந்து எவ்வித அழைப்பும் உங்களுக்கு வராது என்பதை போன்றே வாட்ஸ்அப் அழைப்புகளையும் பிளாக் செய்ய முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்..

    செயலிழக்க செய்யும் செயலியை பயன்படுத்தலாம்:

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் அழைப்புகளை பிளாக் செய்ய Disable WhatsApp Call Apk என்ற செயலியை டவுன்லோடு செய்து உங்களின் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

    டவுன்லோடு செய்த செயலியை இயக்க வேண்டும்:

    உங்களது போனில் Disable WhatsApp Call Apk செயலி இன்ஸ்டால் செய்ததும் அதனினை இயக்க வேண்டும். பின் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று வாட்ஸ்அப் அழைப்புகளை பிளாக் செய்யலாம். 

    பயன்பாட்டிற்கு ஏற்ற ஆப்ஷனினை தேர்வு செய்யலாம்:

    செயலியை இன்ஸ்டால் செய்ததும் Disable WhatsApp Call ஆப்ஷனினை ஆன் செய்ய வேண்டும். பின் இன்கமிங் அல்லது அவுட்கோயிங் என உங்களின் தேவைக்கு ஏற்ப ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்த பின் உங்களுக்கு அழைப்புகளை மேற்கொள்பவர் மீண்டும் வாட்ஸ்அப்பில் அழைத்தால் அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டு சாதாரண அழைப்பாக மாற்றப்பட்டு விடும்.  
    Next Story
    ×