search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் சலுகை
    X

    2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் சலுகை

    ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் ரூ.189 சலுகையில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. #idea



    ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் ரூ.189 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகள் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.189 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதாவது தினமும் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை வழங்கப்பட்டது.

    இந்த சலுகையில் பயனர்களுக்கு 2 ஜி.பி. 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வோடபோன் போன்றே, ஐடியா நிறுவனமும் 2 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஐடியா வழங்கிய ரூ.189 சலுகையில் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.189 ரீசார்ஜ் சலுகை தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட சில ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் புதிய சலுகை வழங்கப்படுகிறது.



    இந்த போன்ற சலுகையை வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் அறிவித்தது. வோடபோன் நிறுவனத்துடன் இணைந்த பின் ஐடியா அறிவித்திருக்கும் முதல் சலுகையாக இது அமைந்துள்ளது. இதே சலுகை வோடபோன் பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    எனினும் வோடபோன் சேவையை பயன்படுத்தும் சில பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஐடியா வழங்கும் ரூ.189 சலுகை ஜியோவின் ரூ.198 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×