search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அழகிய வடிவமைப்பில் ஜெப்ரானிக்ஸ் டாக்கிங் ஹப் அறிமுகம்
    X

    அழகிய வடிவமைப்பில் ஜெப்ரானிக்ஸ் டாக்கிங் ஹப் அறிமுகம்

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய 5 போர்ட் டாக்கிங் ஹப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டாக்கிங் ஹப் வடிவமைப்பு அழகிய தோற்றம் மற்றும் எல்இடி கொண்டிருக்கிறது.



    தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், "ZEB-5CSLU3" என்ற பெயரில் புதிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகம் செய்திருக்கிறது. சார்ஜிங் செய்வது மட்டுமின்றி காளான் வடிவில் எல்இடி வசதியும் கொண்டிருக்கிறது.

    இரவு உறக்கத்தை துறந்து, எந்நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பவர்களை குறிக்க 'டிஜிட்டல் போதை' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. திரையில் பார்வையைச் செலுத்தும் நேரத்தைக் குறைப்பது மட்டுமே ஆழ்ந்த உறக்கத்திற்கு அவசியம். உறங்கும் போதும் இடையிடையே டிஜிட்டல் உலகிற்கு விசிட் அடிப்பவர்கள் பெரும்பாலும், உறங்கும் சிறிது நேரத்திற்கு அவற்றை சார்ஜரில் வைக்கின்றனர். 

    அவ்வாறு உங்களது அனைத்து சாதனங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து சார்ஜ் செய்வது, வீட்டின் எல்லா அறைகளிலும் உள்ள போர்ட்களில் சார்ஜ் செய்வதை விட சிறப்பானதாக இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது உறங்கி எழுந்ததும் உட்கார்ந்த இடத்தில் டிஜிட்டல் உலகிற்கு சில க்ளிக்களில் செல்ல முடியும். இந்த கடுமையான சவாலை எளிமையாக எதிர்கொள்ள ZEB-5CSLU3 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
     
    ஜெப்ரானிக்ஸ் 'ZEB-5CSLU3' உடன் 5 போர்ட் டாக்கிங் ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதனால் சுவர்களில் பல்வேறு வயர்கள் தொங்கிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து உங்களது சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்த உதவுகிறது. சார்ஜிங் டாக்-இல் இருக்கும் காளான் வடிவ எல்இடி படுக்கை அறை விளக்கு போல செயல்படுகிறது.
     


    ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்து போகும் பட்சத்தில், சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்தால் சாதனங்களுக்கு சார்ஜ் ஏறிவிடும். இந்த டாக்கிங் ஹப் எளிய மற்றும் அழகிய வடிவமைப்பு கொண்டிருப்பதால் அலுவலக மேஜைக்கும் ஏற்றதாக இருக்கிறது.  
     
    ஜெப்ரானிக்ஸ் 5CSLU3 5 USB போர்ட்டுகளை கொண்டிருப்பதோடு சிறப்பான சார்ஜிங்கிற்காக ஸ்மார்ட் ஐ.சி. பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் பயனரின் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது. இதில் சார்ஜ் ஏற்ற 5 USB போர்ட்டுகள் உள்ளன, அவற்றில் 1-4 வரை 5v சப்போர்ட் மற்றும் 5-வது போர்ட்-இல் 12v/9v/5v சப்போர்ட் கொண்டிருக்கிறது. 
     
    "அதிக வசதிகள் கொண்ட மற்றும் சிறப்பாக செயல்படும் சாதனங்களுக்கான தேவை மீது கவனம் செலுத்தி இந்த 5 போர்ட் சார்ஜிங் டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சிறிய வடிவமைப்பில் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டது," ஜெப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் பிரதீப் தோஷி தெரிவித்தார்.
     
    இந்த சார்ஜிங் டாக் வரம்பில் பிரித்து எடுக்கக் கூடிய தடுப்புடன் கூடிய எல்இடி அமைப்புடன் 4 போர்ட்டுகள் கொண்ட மாடலும் கிடைக்கிறது. இந்த சாதனம் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×