என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சியோமி Mi மேக்ஸ் 2: மே மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது
Byமாலை மலர்23 Feb 2017 7:31 PM GMT (Updated: 23 Feb 2017 7:31 PM GMT)
சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மே மாதம் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் வெய்போ தளத்தில் இதுகுறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சியோமி Mi மேக்ஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் மே மாதம் வெளியிடப்படலாம் என சீனாவின் வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சியோமி Mi மேக்ஸ் 2 என இந்த ஸ்மார்ட்போன் அழைக்கப்படலாம் என்றும் இதன் சிறப்பம்சங்களும் கசிந்துள்ளது.
அதன் பிடி புதிய சியோமி Mi மேக்ஸ் 2 6.44 இன்ச் FHD டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மெமரியை பொருத்த வரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிப்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த MIUI யூஸர் இன்டர்பேஸ் மற்றும் 5000 எம்ஏச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. கேமரா மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி Mi மேக்ஸ் ஒரு மாதம் கழித்தே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4850 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
Next Story
×