search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரகசியமாய் உருவாகி வரும் சியோமி ரெட்மி நோட் 5: இணையத்தில் கசிந்த புதிய தகவல்
    X

    ரகசியமாய் உருவாகி வரும் சியோமி ரெட்மி நோட் 5: இணையத்தில் கசிந்த புதிய தகவல்

    சியோமி நிறுவனம் அடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
    பீஜிங்:

    இணையத்தில் பலமுறை லீக் ஆகி பின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சியோமி நிறுவனம் வெளியிட்டது. சுமார் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஹீலியோ X20 சிப்செட் கொண்டிருந்தது. தற்சமயம் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    அமெரிக்காவின் FCC சான்றளிக்கும் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 32GB மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் 64GB மாடல் ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டா கோர் சிப்செட் அல்லது 2.15 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ x25 டீகா-கோர் சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மெமரியை பொருத்த வரை 4GB ரேம், 32GB மற்றும் 64GB இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல்கள் வெளியாகலாம் என்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் குவிக் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வோல்ட்இ, ப்ளூடூத், வை-பை, GPS மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த MIUI 9 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×