search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹானர் 6X ஸ்மார்ட்போன் அறிமுகம்: முழு தகவல்கள்
    X

    ஹானர் 6X ஸ்மார்ட்போன் அறிமுகம்: முழு தகவல்கள்

    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6X ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஹானர் 6X ஸ்மார்ட்போனினை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஹானர் 6X ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 முதல் ரூ.15,800க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ஹானர் 6X ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ், ஆக்டா கோர் கிரின் 655 சிபியு வழங்கப்பட்டுள்ளது. 

    ஹானர் 6X ஸ்மார்ட்போன் 3GB ரேம், 32GB இன்டர்னல் மெமரியும், 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரி என இரு வித மாடல்களில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 4GB மெமரி கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 12எம்பி டூயல் கேமரா, ஆட்டோபோகஸ் அம்சம் மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.  

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ, எல்டிஇ, GPS/A-GPS, ப்ளூடூத் 4.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவில் வழங்கப்பட்டுள்ள இதே அம்சங்கள் இந்திய பதிப்பிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    சீனாவில் ஹானர் 6X 3GB ரேம், 32GB இன்டர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் CNY 999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,990 என்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் CNY 1299, இந்திய மதிப்பில் ரூ.12,900 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×