search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் - நார்வே பிரதமர்
    X

    வழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் - நார்வே பிரதமர்

    ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார். #ISISChildren #NorwayPM
    ஆஸ்லோ:

    லண்டன், பிரான்ஸ், நார்வே ஆகியவற்றில் இருந்து ஐஎஸ் அமைப்பில் இணைய பலர்  சிரியாவிற்கு சென்றனர். சமீபத்தில் அமெரிக்கப்படையிடம் சில ஐஎஸ் பயங்கரவாதிகள் சிக்கினர்.

    இதையடுத்து அவர்களது குடும்பங்கள் குறித்து நார்வே பிரதமர் எர்னா சொல்பெர்க் கூறுகையில், 'நாங்கள் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்காக இல்லம் கொடுக்கவில்லை. அவர்களது மனைவிகளுக்கும் இடமில்லை. ஆனால் அவர்களால் வழி தவறி நிற்கும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தான் ஆதரவற்றோர் இல்லம் அமைக்க உள்ளோம்' என கூறினார்.

    இதையடுத்து எர்னாவின் இந்த கருத்து பல அரசியல் தலைவர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக இருந்தது. இது குறித்து முன்னாள் நீதித்துறை அமைச்சர் கூறுகையில், 'மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஐஎஸ் பயிற்சி பெற்ற சிறுவர்களுக்கு ஆதரவு தருவது போல் இச்செயல் உள்ளது. இது மிகவும் சிக்கலானது மற்றும் ஆபத்தானது' என கூறினார்.



    எர்னாவின் இந்த திட்டம் குறித்து துணை ஜனாதிபதி அபித் ராஜா கூறுகையில், 'எத்தனையோ ஐஎஸ் குழந்தைகள் வழி தவறி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும். அனாதைகளுக்கும், தாயுடன் வாழும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், குழந்தைகள் அனைவரையும் சமமாக நடத்திட வேண்டும் என்பதை உணர்கிறேன்' என கூறினார்.  #ISISChildren #NorwayPM

    Next Story
    ×