search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது- 10 பேர் இறந்ததாக தகவல்
    X

    ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது- 10 பேர் இறந்ததாக தகவல்

    ஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. #IranPlaneCrash
    தெஹ்ரான்:

    கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, போயிங் 707 ரக சரக்கு விமானம் ஈரானுக்கு புறப்பட்டு வந்தது. அதில், விமானிகள் உள்ளிட்ட 10 பேர் பயணம் செய்தனர்.

    அந்த சரக்கு விமானம் ஈரானின் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, மோசமான வானிலை காரணமாக, ரன்வேயில் இறங்குவதற்கு முன்பாக, கம்பி வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கியதும் விமானம் தீப்பிடித்தது.


    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுகளும், மருத்துவ ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. #IranPlaneCrash
    Next Story
    ×