search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி - ஜப்பான் போர் கப்பல்கள் விசாகப்பட்டினம் வந்தன
    X

    இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி - ஜப்பான் போர் கப்பல்கள் விசாகப்பட்டினம் வந்தன

    இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஜப்பான் நாட்டு போர் கப்பல்கள் இன்று விசாகப்பட்டினம் கடற்பகுதியை வந்தடைந்தன. #JIMEX 2018
    புதுடெல்லி:

    இந்தியா-ஜப்பான் கடற்படை வீரர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை கடற்பகுதியில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அருகே உள்ள கடற்பகுதியில் இருநாட்டு வீரர்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அவ்வகையில், மூன்றாவது முறையாக கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஜப்பான் நாட்டின் காகா, இசுமோ ஆகிய அதிநவீன போர் கப்பல்களுடன் அந்நாட்டு தற்காப்புப்படை வீரர்கள் இன்று விசாகப்பட்டினம் கடற்பகுதியை வந்தடைந்தனர்.

    வரும் 15-ம் தேதிவரை நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியாவின் ஆயுதம் தாங்கிய போர் கப்பலான ஐ.என்.எஸ்.சத்புரா, நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் கொண்ட ஐ.என்.எஸ்.கட்மட் மற்றும் ஏவுகணைகளை செலுத்தும் ஐ.என்.எஸ். சக்தி உள்ளிட்ட போர் கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுகின்றன. #JIMEX 2018 #Japaneseships #Vizagport
    Next Story
    ×