search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா துணை பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
    X

    ரஷியா துணை பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

    ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ரஷியா துணை பிரதமர் யூரி போரிசோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #SushmaSwaraj
    மாஸ்கோ:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். பயணத்தின் ஒருபகுதியாக ரஷியாவின் துணை பிரதமர் யூரி போரிசோவை அவர் மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.

    இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டரில் கூறுகையில், ரஷியா-இந்தியா நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஆணையத்தின் மாநாடு மாஸ்கோவில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷியா துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய சுஷ்மா, இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரஷியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ரஷியாவில்  இந்தியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது. இரண்டு நாடுகளும் இணைந்து 2025-ம் ஆண்டிற்குள் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இப்போதே அந்த இலக்கை எட்டிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக
    அவர் தெரிவித்தார்.

    பின்னர் நடைபெற்ற துணை பிரதமர் யூரி போரிசோவுடனான சந்திப்பில், அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையேயான உறவை விரிவுபடுத்தி புதிய வாய்ப்புகளை கண்டறிவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர் என ராவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். #SushmaSwaraj
    Next Story
    ×