search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்ச்சை பேச்சு - இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
    X

    சர்ச்சை பேச்சு - இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

    சர்ச்சைக்குறிய வகையில் பேசிய தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு வருகிற ஜூலை 25-ம் தேதி பொதுதேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.  அவற்றில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும் ஒன்று. அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து கடந்த ஜூலை 12ந்தேதி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் நாடு திரும்பினர். 

    இதுகுறித்து பேசிய இம்ரான் கான் ஷரீப்பை விமான நிலையத்தில் வரவேற்க செல்பவர்கள் நிச்சயம் கழுதைகளாக இருக்க வேண்டும் என கூறினார்.

    இம்ரான் கானின் சர்ச்சை பேச்சுக்கு ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், எதிராக தேர்தல் பிரசாரத்தில் எதிரணியினரை முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி இம்ரான் கான் விமர்சிப்பதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையமும் தடை விதித்துள்ளது.  

    மேலும், தேர்தல் ஆணையத்தின் முன் ஆஜராகும்படியும் உத்தரவிட்டு இருந்தது. எனினும், இம்ரான் கானுக்கு பதிலாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அவான் ஆஜரானார்.  தேர்தல் முடிந்த பின்னர் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×