search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலைச்சறுக்கு பயில இனி கடலுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்காவில் செயற்கை பயிற்சி மையம்
    X

    அலைச்சறுக்கு பயில இனி கடலுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்காவில் செயற்கை பயிற்சி மையம்

    அமெரிக்காவின் அலைச்சறுக்கு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கரான கெல்லி ஸ்லாட்டர் செயற்கை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.
    நியூயார்க்:

    அலைச்சறுக்கு பயணம் செய்ய வேண்டுமானால் கடலுக்குத்தான் செல்ல வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில்தான் பெரிய அலைகள் எழும். இப்படி பெரிய அலைகளில் பயிற்சி செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது.

    இயற்கையை சார்ந்திருந்து செய்ய வேண்டிய இந்த அலைச் சறுக்கு பயிற்சியை உள்ளரங்கத்தில் வழங்க வசதியாக செயற்கை அலைச்சறுக்குப் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. தெற்கு கலிபோர்னியாவில் உலகின் மிகப்பிரம்மாண்டமான அலைச்சறுக்கு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. 11 முறை அலைச்சறுக்குதலில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கரான கெல்லி ஸ்லாட்டர் இந்த செயற்கை அலைச்சறுக்கு மையத்தை உருவாக்கி உள்ளார்.

    டபுள்யு.எஸ்.எல். சர்ப் ராஞ்ச் என்ற பெயருடைய இந்த பயிற்சி மையம் லிமோர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த அலைச்சறுக்கு மையம் பார்க்க கடல் போல பிரமாண்டமாக காட்சி தருகிறது. மின்சாரம் மற்றும் எந்திரங்களின் உதவியுடன் செயற்கையாக அலைகள் உருவாக்கப்படுகின்றன. 6.5 அடி உயரம் முதல் பல அடி உயரங்களில் அலைகள் உருவாக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. 50 விதமான அலைகள் மற்றும் சுழல்கள் உருவாக்கப்படுவது சிறப்புக்குரியது. இத்தகைய வினோத சுழற்சி அலைகளில் பயிற்சி பெறுவது அலைப்பயிற்சி வீரர்களுக்கு உற்சாகம் தருவதுடன், எத்தகைய கடினமான அலைகளிலும் சாதனை செய்யும் ஊக்கத்தை தரும் என்கிறார் பயிற்சி மைய நிர்வாகி கெல்லி.

    2015-ல் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. கடந்த மாதத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க செயற்கையாக ஒரு ஏரியே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 205 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. அலைச்சறுக்கு மையம் திறப்பு விழாவின் முதல் 2 நாட்களுக்கு, உலகின் 25 சிறந்த சர்பிங் வீரர்களை, 5 குழுவாக பிரித்து சிறிய உலகப்போட்டியே நடத்தி பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தார்கள்.

    Next Story
    ×