என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி
Byமாலை மலர்19 March 2018 10:41 PM GMT (Updated: 19 March 2018 10:41 PM GMT)
சிரியா நாட்டின் அர்பின் பகுதியில் விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #SaveSyria #SyriaAirStrike #ArbinSchool
பெய்ரூட்:
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள ஒரு பள்ளியை குறிவைத்து சில விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாக என சிரியாவில் செயல்பட்டுவரும் பிரட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து சிரியா அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
கடந்த 17-ம் தேதி சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் 12 பேரும், துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SaveSyria #SyriaAirStrike #AfrinSchool #tamilnews

Next Story
×