search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    373 பேருடன் வானில் பறந்த விமான என்ஜின் கழன்று விழுந்ததால் பரபரப்பு
    X

    373 பேருடன் வானில் பறந்த விமான என்ஜின் கழன்று விழுந்ததால் பரபரப்பு

    அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. #UnitedAirlines #passengerjet #enginecoverripsapart
    சான் பிரான்சிஸ்கோ:

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஹவாய் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக ஒரு போயிங் 777 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமானிகள், பணிப்பெண்கள், பயணிகள் உட்பட 373 பேர் பயணம் செய்துள்ளனர்.

    அந்த விமானம் கிளம்புவதற்கு முன் மிகவும் சரியான நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் சிறிய தேவையற்ற அசைவுகள் இருந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஒரு பெரிய சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து விமானத்தின் வெளியே பார்த்தவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த விமானத்தின் வலதுபக்கம் இருந்த ஒரு என்ஜினின் மேல் பகுதி கழன்று விழுந்துள்ளது.

    சிறிது நேரத்திற்கு பிறகு முதல்முறையைவிட இன்னும் பெரிய சத்தம் கேட்டு இருக்கிறது. அப்போது மொத்தமாக அந்த என்ஜினின் ஒரு பகுதி அப்படியே கழன்று விழுந்துள்ளது. இதையடுத்து விமானம் நிலைதடுமாறி ஆடியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 363 பேரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள்.



    அந்த என்ஜினின் ஒரு பாதி விமானத்திலேயே இருந்துள்ளது. மீதி பாதி பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. இதையடுத்து, பயணிகளுக்கு அவசரக் காலத்தில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருப்பினும் மீதம் இருக்கும் மூன்று என்ஜின்களை வைத்துக்கொண்டு விமானத்தை கண்டிப்பாக தரையிறக்க முடியும் என விமானிகள் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் அந்த விமானம் ஹவாயில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 363 பயணிகள், 8 விமான பணியாளர்கள், 2 விமானிகள் ஆகியோருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு சிறிய போல்ட்டில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என விமானி கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #UnitedAirlines #passengerjet #enginecoverripsapart #tamilnews
    Next Story
    ×