search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியவகை தோல் நோயால் அவதி: மரபணு சிகிச்சை மூலம் 7 வயது சிறுவன் பிழைத்தான்
    X

    அரியவகை தோல் நோயால் அவதி: மரபணு சிகிச்சை மூலம் 7 வயது சிறுவன் பிழைத்தான்

    ஜெர்மனியில் அரியவகை தோல் நோயால் அவதிப்பட்ட 7 வயது சிறுவன் மரபணு சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள சம்பவம் மருத்துவ துறையில் சாதனையாக கருதப்படுகிறது.
    பாரீஸ்:

    ஜெர்மனியை சேர்ந்த 7 வயது சிறுவன் அரியவகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டான். அவன் உடலின் தோல் பகுதி அழுகி கொண்டே வந்தது.

    எனவே அவன் ஜெர்மனியில் போச்சம் என்ற இடத்தில் உள்ள ருகர் பல்கலைக்கழகத்தில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

    அங்கு அவனுக்கு பலவித சிகிச்சை அளிக்கப்பட்டது. தந்தையின் தோல் எடுத்து அவனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி பார்க்கப்பட்டது. அது ஒத்துவரவில்லை. மேலும் பல வழிகளில் முயற்சி செய்தும் பலனில்லை.

    இந்த நிலையில் அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஒருவித மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். இந்த நிலையில் அவனது உடலில் 80 சதவீத தோல் பகுதி முற்றிலும் அழிந்துவிட்டது. அவன் 2 மாதத்தில் மரணம் அடையும் நிலையில் இருந்தான்.


    எனவே தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட டாக்டர்கள் அதிரடி மரபணு சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து சரியான அளவு செல்கள் உருவாகி அழிந்த தோல் பகுதி மீண்டும் வளர தொடங்கியது.

    தற்போது அவன் முற்றிலும் குணமடைந்து விட்டான். இறக்கும் தருவாயில் இருந்த சிறுவன் உயிர் பிழைத்தான். இது மருத்துவ துறையில் சாதனையாக கருதப்படுகிறது.
    Next Story
    ×