search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்திஸ்தான் போராளிகள் பிடியில் இருந்த சிஞ்சார் நகரை ஈராக் ராணுவம் மீட்டது
    X

    குர்திஸ்தான் போராளிகள் பிடியில் இருந்த சிஞ்சார் நகரை ஈராக் ராணுவம் மீட்டது

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் வேட்டைக்காடாக மாறியிருந்த சிஞ்சார் நகரை குர்திஸ்தான் போராளிகள் பிடியில் இருந்த சிஞ்சார் நகரை ஈராக் ராணுவம் மீட்டுள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் நிவேனே மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த ஷிங்கால் மாவட்டத்தில் யாஸிதி இனத்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் ஈராக் அரசுக்கு இணையாக மாற்று அரசாங்கத்தை நடத்திவந்த குர்திஸ்தான் போராளிகள் இங்குள்ள சிஞ்சார் நகரத்தை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    சிரியா எல்லையை கடந்து ஈராக் நாட்டில் கால்பதித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு சிஞ்சார் நகருக்குள் ஊடுருவி வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பலரை கொன்றுவிட்டு யாஸிதி இனத்தை இளம்பெண்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தினர்.

    சிஞ்சார் நகரை கைப்பற்ற ஈரான் அரசின் உதவியுடன் சமீபகாலமாக தனிப்படை அமைத்து தாக்குதல் நடந்து வந்தது. இந்த தாக்குதலுக்கு பயந்து சிஞ்சார் நகரை தங்களது ஆக்கிரமிப்பில் வைத்திருந்த குர்திஸ்தான் போராளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும், சிஞ்சார் நகரம் முழுவதும் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×