search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அழகியாக கல்லூரி மாணவி காரா மன்ட் தேர்வு
    X

    அமெரிக்க அழகியாக கல்லூரி மாணவி காரா மன்ட் தேர்வு

    2018-ம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக கல்லூரி மாணவியும், வடக்கு டக்கோட்டா மாநில அழகியுமான காரா மன்ட் (23) தேர்வு செய்யப்பட்டார்.
    நியூயார்க்:

    அடுத்த ஆண்டுக்கான அமெரிக்க அழகியை தேர்வு செய்யும் 97-வது ஆண்டு போட்டி அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில்  நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மற்றும் புவெர்டோ ரிக்கோவை சேர்ந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 52 மாநில அழகிகள் பங்கேற்றனர்.

    நீச்சல் உடை அணிவகுப்பு, பகுத்தறிவுசார்ந்த கேள்வி-பதில், இசை மற்றும் நடனத்தில் திறமையை வெளிப்படுத்துதல் ஆகிய சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் கலந்துகொண்ட 52 பெண்களில் இறுதிச்சுற்றுக்கு மொத்தம் 15 பேர் தேர்வாகி இருந்தனர்.

    தலா 20 வினாடிகள் நடைபெற்ற நேர்முக கேள்வி-பதில் சுற்றில் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக தீர்மானித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முடிவு தொடர்பான கேள்விகளுக்கு சாதுர்யமாக பதிலளித்த கல்லூரி மாணவியும், வடக்கு டக்கோட்டா மாநில அழகியுமான காரா மன்ட் (23) 2018-ம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    டிரம்ப்பின் தவறான முடிவு நம்மை பேச்சுவார்த்தைக்கான நாற்காலியின் முன் அமர வைத்துவிடும் என அவர் கூறிய பதிலை அரங்கில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.



    கடந்த ஆண்டில் 2017-ம் ஆண்டுக்கான அமெரிக்க அழகி பட்டத்தை வென்ற சாவ்வி ஷீல்ட்ஸ், காரா மன்ட் தலையில் கிரீடம் சூட்டி வாழ்த்தினார்.  

    இரண்டாவது இடத்தை மிசோரி மாநிலத்தை சேர்ந்த ஜெனிபர் டேவிஸ் பிடித்தார். அமெரிக்க அழகியாக தேர்வாகியுள்ள காரா மன்ட், பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த ஆண்டின் கல்வி செலவுக்கு 50 ஆயிரம் டாலர்களுடன், சில லட்சம் டாலர்கள் சம்பளத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் பகுதிநேர தொகுப்பாளினி வேலையும் இவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×