search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் விவகாரம் குறித்து பேசலாம் - இந்தியாவிற்கு பாக். ஜனாதிபதி அழைப்பு
    X

    காஷ்மீர் விவகாரம் குறித்து பேசலாம் - இந்தியாவிற்கு பாக். ஜனாதிபதி அழைப்பு

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள முக்கிய பிரச்சனையான காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள முக்கிய பிரச்சனையான காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் தேசிய தினம் அந்நாட்டில் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹுசைன் ,''ஐ.நா. தீர்மானத்தின் படி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண தயாராக உள்ளோம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் தொடர்ந்து துணை நிற்கும்.காஷ்மீர் பிரச்னையில் அமைதி ஏற்படுத்த உலக நாடுகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். பாகிஸ்தான் பல ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. பாகிஸ்தான் மக்கள் தற்போது முன்பைவிட பாதுகாப்பாக உள்ளனர். இதற்காக பாதுகாப்புப் படைகள் தியாகங்களை செய்துள்ளன" என்று கூறினார்.

    மேலும், இந்திய ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
    Next Story
    ×