search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் இரசாயன தொழிற்சாலை விபத்துகளுக்கு 199 பேர் பலி
    X

    சீனாவில் இரசாயன தொழிற்சாலை விபத்துகளுக்கு 199 பேர் பலி

    சீனாவில் இரசாயன விபத்துக்களால் இந்த ஆண்டில் 199 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சீனா முழுவதும் ஏராளமான இரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இரசாயன தொழிற்சாலைகளால் அங்கே விபத்துகள் நடப்பதும் சர்வசாதாரணமாக உள்ளது.

    இந்நிலையில் ஆண்டின் தொடக்கமான ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 232 விபத்துகள் அந்நாட்டின் இரசாயன தொழிற்சாலைகளில் நடைபெற்றிருப்பதாக அரசு சாரா தொண்டு நிறுவனமான கிரீன்பீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

    இரசாயன விபத்துகள் குறித்து கிரீன்பீஸ் நிறுவனம் '' கடந்த ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சீனா நாட்டில் இரசாயன தொழிற்சாலைகளால் 232 விபத்துகள் நடைபெற்றுள்ளன.இந்த விபத்துகளால் 199 பேர் மரணமடைந்துள்ளனர். 400-க்கும் அதிகமான பேர் காயமடைந்துள்ளனர். இரசாயன தொடர்பான விபத்துக்களை சமாளிக்க சீன அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது.

    2011 -ம் ஆண்டு தகவலின்படி 33,625 இரசாயன தொழிற்சாலைகள் சீன நாட்டின் கிழக்கு பகுதிகளில் இயங்கி வருகின்றன. இரசாயன தயாரிப்பு, இரசாயனங்களை சேமித்து வைப்பது மற்றும் ஆபத்தான இரசாயனங்களை அகற்றுவது தொடர்பாக புதிய விதிகளை அமல்படுத்திட சீன அரசாங்கம் தொடர்ந்து திணறி வருகிறது. 2011-ம் ஆண்டில் போடப்பட்ட விதிகளை மாற்றி புதிய விதிகளை சீன அரசு கொண்டுவர வேண்டும் என்பதையே இத்துறை வல்லுனர்களும் விரும்புகின்றனர்''.

    இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
     
    Next Story
    ×