search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் இருந்து ஷீரடிக்கு சுற்றுலா சிறப்பு ரெயில்
    X

    மதுரையில் இருந்து ஷீரடிக்கு சுற்றுலா சிறப்பு ரெயில்

    மதுரையில் இருந்து ஷீரடிக்கு வருகிற 3-ந்தேதி சிறப்பு சுற்றுலா ரெயில் புறப்பட்டுச் செல்கிறது.
    மதுரை:

    இந்திய ரெயில்வேயும், இந்திய ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகமும் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணைந்து பாரத தரிசன சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    பாரத தரிசன சுற்றுலா திட்டத்தின் கீழ் ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் வருகிற 3-ந்தேதி மதுரையில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக மராட்டிய மாநிலம் ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் செல்கிறது. 6 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் ஒருவருக்கு 5 ஆயிரத்து 670 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்கும் வாகன வசதி ஆகியவை இந்த கட்டணத்தில் அடங்கும்.
    Next Story
    ×