search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6-ம் வகுப்பு புத்தகத்தில் நீலகிரி மலை ரெயில் பாடம்
    X

    6-ம் வகுப்பு புத்தகத்தில் நீலகிரி மலை ரெயில் பாடம்

    பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள 6-ம் வகுப்பு 2ம் பருவ சமச்சீர் ஆங்கில பாட புத்தகத்தில் ‘ட்ரீப் டூ ஊட்டி’ என்ற தலைப்பில் நீலகிரி மலை ரெயில் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. #OotyTrain
    கோவை:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை சார்பில் 2-ம் பருவ சமச்சீர் பாட புத்தகம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. புதிதாக வழங்கப்பட்ட 6-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் ட்ரீப் டூ ஊட்டி என்ற தலைப்பில் நீலகிரி மலை ரெயில் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.

    புத்தகத்தில் மாணவ-மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று வந்தது போன்றும், தங்கள் பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வது போன்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

    வான் உயர்ந்த மலை, அடர்ந்த வனம், பரந்து விரிந்த தேயிலை தோட்டத்தின் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஊர்ந்து செல்லும் மலை ரெயிலில் பயணிப்பது, பிரமிக்க வைத்தது. இடையில் தாய் மற்றும் குட்டி யானை தண்டவாளத்தை வழி மறித்து நின்றது.

    இதனால் 30 நிமிடங்கள் பயண நேரத்தில் தாமதம் ஏற்பட்டது என மலை ரெயில் பயணத்தின் போது மாணவர்கள் தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத்தில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நீலகிரி மலை ரெயில் ஊர்ந்து செல்வது போன்று படம் அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த பாடம் குழந்தைகளை சந்தோ‌ஷப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மலை ரெயில் மற்றும் ஊட்டி அங்கு வசிக்கும் பழங்குடியினர் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. #OotyTrain

    Next Story
    ×