search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பயிற்சியாளர் ஆறுமுகம்
    X
    கைதான பயிற்சியாளர் ஆறுமுகம்

    கோவை மாணவி உயிரிழப்பு - கைதான பயிற்சியாளர் சென்னையை சேர்ந்தவர்

    மாணவி உயிரிழப்புக்கு காரணமாக பயிற்சியாளர் ஆறுமுகம் சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் பேரிடர் மேலாண்மை தொடர்பாக டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் டிப்ளமோ பயிற்சி முடித்துள்ளார்.
    கோவை:

    பயிற்சியாளர் ஆறுமுகம் சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் பேரிடர் மேலாண்மை தொடர்பாக டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் டிப்ளமோ பயிற்சி முடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 2016-ம் ஆண்டு பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்று தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு சென்று பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை அளித்து வருகிறாராம். இதுவரை 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சிகளை அளிக்கும் போது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வசதிகளை செய்த பின்னர் தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

    இவற்றை தெரிந்து கொண்டு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு ஆறுமுகம் பயிற்சி கொடுத்ததாலேயே மாணவி உயிரிழக்க நேர்ந்துள்ளது. 
    Next Story
    ×