search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.

    சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

    சேலத்தில் 250-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குட்கா, பான்மசாலாவை பறிமுதல் செய்த போலீசார் இதன் மதிப்பு ரூ.80 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவித்தனர்.
    சேலம்:

    சேலம் புத்தூர் இட்டேரி ரோட்டில் உள்ள குடோன்களில் தடை செய்யப்பட்ட குட்கா உள்பட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது.

    தெற்கு சரக உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு குடோனில் 3 பேர் குட்கா மற்றும் பான் மசாலாவை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அந்த குடோனில் இருந்த 50 மூட்டை குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அருகில் இருந்த 2 குடோன்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த குடோன்களிலும் 250-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குட்கா, பான்மசாலா இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குட்கா மூட்டைகளையும் அங்கு நின்று கொண்டிருந்த வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.80 லட்சத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    குடோனிலிருந்த சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த மோகன் (24), சுரேஷ் (27) பீமாராம் (35) ஆகியோரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது குடோன்களில் குட்காவை பதுக்கி வைத்தது குட்கா மொத்த விற்பனையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (32) என்பது தெரிய வந்தது. இவர் செவ்வாய்ப்பேட்டையில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இந்த குட்காவை பதுக்கி வைத்திருந்ததும், அங்கு போலீசார் அடிக்கடி சோதனை நடத்தியதால் போலீசாருக்கு பயந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைவான பகுதியான அந்த பகுதியில் குடோன்களை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    மேலும் இரவு நேரங்களில் மட்டும் அங்கிருந்து வாகனங்களில் பொருட்களை ஏற்றி சென்றதால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் இந்த கும்பல் சிக்கியுள்ளளது. மேலும் இந்த குட்கா விவகாரத்தில் வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து வேறு குடோன்களிலும் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×