search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
    X
    கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு 2146 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    திருவண்ணாமலையில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, 2,140 சிறப்புபஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், சித்ராபவுர்ணமி சிறப்புக்குரியது. அதன்படி, இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.

    கிரிவலம் செல்ல உகந்த நேரம் மே10-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 12.09மணிக்கு தொடங்கி, 11ம் தேதி அதிகாலை 3.04 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே, 10ம்தேதி இரவு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமியன்று சுமார் 12 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் வரை கிரி வலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக் டர் அலுவலகத்தில் கலெக் டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது.

    எஸ்.பி. பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, கோவில் இணை ஆணையர் சி.ஹரிப்பிரியா, ரூரல் டி.எஸ்.பி. தேவநாதன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சித்ரா பவுர்ணமியன்று பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையை முறைப்படுத்தி, விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும், சித்திரை மாத கடும் வெயிலில் பக்தர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, தேவையான நிழற்பந்தல், குடிநீர் வசதி களை செய்துதர கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், விழுப்புரம், சேலம், கும்பகோணம் ஆகிய கோட்டங்களில் இருந்து சுமார் 2,146 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டிருப்பதாக போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர். 6 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    மேலும், சுமார் 2,100 ஆயிரம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


    Next Story
    ×