search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 610 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 610 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் 610 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

    அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் இன்று கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டு அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் 1, 2-வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 3 யூனிட்டுகளிலும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அனல்மின் நிலைய ஊழியர்கள் கூறும் போது, ‘30 ஆண்டுகளை கடத்து இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி விபத்து மற்றும் பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது 4,5-வது யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. 3-வது யூனிட்டில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது’ என்றனர்.
    Next Story
    ×