search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் போராட்டத்தை கைவிட்டு மாணவ - மாணவிகள் கலைந்து சென்றனர்
    X

    விழுப்புரத்தில் போராட்டத்தை கைவிட்டு மாணவ - மாணவிகள் கலைந்து சென்றனர்

    விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் போலீசாரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    விழுப்புரம்:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே நகராட்சி திடலில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது.

    போராட்டத்தில் விழுப்புரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விடிய விடிய அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 7 மணியளவில் போராட்ட பந்தலுக்கு விழுப்புரம் தாலுகா போலீசார் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றுவிட்டனர். எனவே நீங்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவ-மாணவிகள் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×