search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொராக்கோ மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா
    X

    மொராக்கோ மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா

    மொராக்கோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்ய வீரர், வீராங்கனைகள், பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றினர். #MoroccoMarathon #KenyanAthletes
    ரபாத்:

    மொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 24 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் கென்யாவைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.  ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சமி கிகன் பந்தய தூரத்தை 2 மணி 2 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து புதிய சாதனையுடன், முதல் பரிசை தட்டிச் சென்றார்.

    மொராக்கோ வீரர் ஆத்மனே எல் கவும்ரி பந்தய தூரத்தை 2 மணி 8 நிமிடம் 20 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தார். எத்தியோப்பிய வீரர் சிலி டிசாசா (2 மணி, 9 நிமிடம், 25 வினாடிகள்)  மூன்றாம் பரிசை வென்றார்.



    பெண்கள் பிரிவில் கென்ய வீராங்கனை சில்வியா கிபட் 2 மணி, 25 நிமிடம், 52 வினாடிகள் என்ற சாதனையுடன் முதல் பரிசை வென்றார். இதேபோல் கென்யாவின் செல்மித் மியூரிகி, பிரிஸ்கா செரோனோ ஆகியோர் 2 மற்றும் 3வது பரிசை தட்டிச்சென்றனர். #MoroccoMarathon #KenyanAthletes

    Next Story
    ×