search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: சோதி, பிளண்டலுக்கு வாய்ப்பு
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: சோதி, பிளண்டலுக்கு வாய்ப்பு

    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #2019WorldCup
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 23-ந்தேதிக்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும்.

    இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. முதல் அணியாக நியூசிலாந்து வீரர்களை தேர்வு செய்து உள்ளது.

    உலகக்கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரர் இஷ் சோதி, டாம் பிளண்டல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிளண்டல் ஒருநாள் போட்டிக்கு அறிமுக வீரர் ஆவார்.



    உலகக்கோப்பையில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:-

    வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், நிக்கோலஸ், ராஸ் டெய்லர், டாம் லாதம், கொலின் முன்ரோ, டாம் பிளண்டல், ஜிம்மி நீசம், கிராண்ட்ஹோம், சான்ட்னெர், சோதி, டிம் சவுத்தி, மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் போல்ட்.

    நியூசிலாந்து அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றது இல்லை. கடந்த உலகக்கோப்பையில் (2015) அந்த அணி 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பை இழந்தது.
    Next Story
    ×