search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று யாருமே கிடையாது: விவிஎஸ் லட்சுமண்
    X

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று யாருமே கிடையாது: விவிஎஸ் லட்சுமண்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று யாருமே கிடையாது என்று, அந்த அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் ஒன்று. வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த முறை டேவிட் வார்னர் தடையால் பங்கேற்கவில்லை.

    அதனால் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ஸ் அணியை வழிநடத்திச் சென்றார். கேன் வில்லியம்சன் ஆட்டத்தாலும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டாலும் ஐதராபாத் இறுதிப் போட்டி வரை சென்றது.

    இந்தத் தொடரில் வார்னர் விளையாடுகிறார். இதனால் ஐதராபாத் அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று யாருமே கிடையாது என அந்த அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து விவிஎஸ் லட்சுமண் கூறுகையில் ‘‘எங்கள் அணி ‘சூப்பர் ஸ்டார்’ கலாச்சாரத்தில் இயங்கவில்லை. ஒவ்வொரு வீரர்களும் அவர்களது திறமையை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

    நாங்கள் கொடுத்த பணம் தவானுக்கு போதுமானதாக அல்ல. அதனால் அவர் வேறு அணிக்குச் செல்ல விரும்பினார். தவான் எங்கள் அணிக்காக விளையாடி கடந்த முறை 497 ரன்கள் சேர்த்தார். அவர் எங்கிருந்தாலும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்’’ என்றார்.
    Next Story
    ×