search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆதரவாக 22 நாடுகளில் இருந்து 8 ஆயிரம் ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள்
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆதரவாக 22 நாடுகளில் இருந்து 8 ஆயிரம் ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள்

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை ஊக்குவிக்க 22 நாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் பாரத் ஆர்மி ரசிகர்கள் இங்கிலாந்து செல்ல இருக்கிறார்கள். #WorldCup2019
    இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது அந்நாட்டு ரசிகர்கள் நேரில் சென்று போட்டியை ரசிப்பது வழக்கம். அப்படி ஒரு குழுவாகச் செல்லும் ரசிகர்கள் ‘பார்மி ஆர்மி’ (Barmy Army) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடும்போது, ‘பார்மி ஆர்மி’ ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வந்து ஆதரவு அளிப்பார்கள்.

    அதேபோல் இந்திய அணியை உற்சாகப்படுத்த ‘பாரத் ஆர்மி’-யை இந்திய அணி ரசிகர்கள் ஏற்படுத்தினர். ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும்போது ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள் மைதானத்திற்கு பெருமளவில் திரண்டு ஆதரவு அளித்தார்கள். இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதும் பாரத் ஆர்மி ரசிகர்களுடன் இணைந்து உற்சாக ஆட்டம் போட்டனர்.

    வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் இந்தியா 9 லீக் ஆட்டங்களில் மோத இருக்கிறது. அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் 11 போட்டிகளில் விளையாடும்.



    இந்திய வீரர்களை நேரில் உற்சாகப்படுத்த 22 நாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் ரசிகர்கள் ‘பாரத் ஆர்மி’ அமைப்பில் இணைகிறார்கள்.

    1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது நான்கு ரசிகர்களால் ‘பாரத் ஆர்மி’ தொடங்கப்பட்டது. தற்போது இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரசிர்கள் உள்ளனர். ‘பாரத் ஆர்மி’யில் இங்கிலாந்து, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் உள்ளனர்.
    Next Story
    ×