search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல்: தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது தன்னம்பிக்கைக்கு உதவியாக இருக்கும்: சாஹல்
    X

    ஐபிஎல்: தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது தன்னம்பிக்கைக்கு உதவியாக இருக்கும்: சாஹல்

    ஐபிஎல் தொடரில் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக பந்துவீசுவது தன்னம்பிக்கைக்கு உதவியாக இருக்கும் என சாஹல் தெரிவித்துள்ளார். #IPL2019 #chahal
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானம் சொந்த மைதானமாகும். இந்த மைதானம் மிகவும் சிறியது. அதேவேளையில் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்.

    ஆனால் சாஹல் சவாலை எதிர்கொண்டு தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். இதனால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

    ஐபிஎல் தொடரில் மேலும் தனது திறமையை நிரூபித்து உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஆர்வமாக உள்ளார். இந்நிலையில் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவது எனது தன்னம்பிக்கைக்கு உதவியாக இருக்கும் என சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘சின்னசாமி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அற்புதமான ஆடுகளங்களில் ஒன்று. கடந்த ஆண்டு ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது பழைய நிலைக்கு (பிளாட்) பிட்ச் மாறியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 190 ரன்களுக்கு மேல் குவிக்கலாம்.



    இதனால் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். ஒவ்வொரு பந்தையும் விளாசும் பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ளும்போது, மனதளவில் எப்படி தயாராகுவது, அன்றைய தினம் மோசமானதாக அமைந்தால், அதில் இருந்து மீள்வது எப்படி போன்றவற்றில் மனதளவில் தயாராக நல்ல வாய்ப்பு.

    மனதளவில் தயாராக மிகவும் சிறப்பாக இருக்கும். இங்கு 14 போட்டிகளில் விளையாடலாம். ஆனால் இந்திய அணிக்காக மூன்று அல்லது ஐந்து போட்டிகளிலும் மட்டுமே விளையாட முடியும். ஆகவே, இந்த மைதானத்தில் சிறப்பாக தயாராகி, இந்திய அணிக்கு மீண்டும் வலுவாக திரும்ப முடியும்’’ என்றார்.
    Next Story
    ×