search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் பெடரரை வீழ்த்தினார் டொமினிக் தியெம்
    X

    இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் பெடரரை வீழ்த்தினார் டொமினிக் தியெம்

    அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் தியெம் சாம்பியன் பட்டம் வென்றார்.
    இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    முதல் செட்டை 6-3 என ரோஜர் பெடரர் எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை டொமினிக் தியெம் கைப்பற்றி அசத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். இறுதியில் 7-5 என தியெம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் தரம்நிலை பெறாத அண்ட்ரீஸ்குவை எதிர்கொண்டார். இதில் அண்ட்ரீஸ்கு 6-4, 3-6, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
    Next Story
    ×