search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை மட்டுமே என்னை கிரிக்கெட்டராக வரையறுக்காது: டி வில்லியர்ஸ்
    X

    உலகக்கோப்பை மட்டுமே என்னை கிரிக்கெட்டராக வரையறுக்காது: டி வில்லியர்ஸ்

    உலகக்கோப்பை மட்டுமே என்னை ஒரு மனிதராகவும், கிரிக்கெட்டராகவும் வரையறுக்காது என்று ‘360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #ABDEVilliers
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். கடந்த ஆண்டு மே மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக்கோப்பை வரை விளையாடும்படி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்ட போதிலும், அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதனால் வங்காள தேசம் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதன்முறையாக விளையாடினார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    டி வில்லியர்ஸ் இல்லாமல் தென்ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்றது. இதற்கு தென்ஆப்பிரிக்காவின் தோல்வியே முக்கிய காரணம்.

    இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவீர்களா? உலகக்கோப்பை வரை விளையாடியிருக்கலாமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி வில்லியர்ஸ் ‘‘உலகக்கோப்பை மட்டுமே என்னை கிரிக்கெட்டராக வரையறுக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவீர்களா? என்பது பதில் அளிப்பதற்கான கடினமான கேள்வி. மீண்டும் அணிக்கு திரும்பினால், நண்பர்களுடன் இணைந்து உயர்ந்த லெவல் கிரிக்கெட்டை நாட்டிற்காக விளையாடலாம். இதை தவற விடுவது சற்று கடினமாக இருக்கிறது.

    ஆனால், ஏராளமான விஷங்களை நான் மிஸ் செய்யவில்லை. 90 சதவிகிதம் விஷயங்களை நான் மிஸ் செய்யவில்லை. சர்வதேச போட்டியில் இருந்து நீண்ட தூரம் சென்று விட்டேன். உலகக்கோப்பை என்னை ஒரு கிரிக்கெட்டராகவும், மனிதராகவும் வரையறுக்க முடியாது’’ என்றார்.
    Next Story
    ×