search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக சிக்ஸ்: டோனி சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா
    X

    அதிக சிக்ஸ்: டோனி சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்காக அதிக சிக்சர்கள் விளாசிய சாதனையில் டோனியை சமன் செய்தார் ரோகித் சர்மா #MSDhoni #RohitSharma
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதன்மூலம் அவர் ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் டோனியை சமன் செய்தார்.

    ரோகித் சர்மா இதுவரை 215 சிக்சர்கள் அடித்து இருக்கிறார். டோனி 222 சிக்சர்கள் அடித்துள்ளார். ஆனால் அவர் இந்திய அணிக்காக 215 சிக்சரும், மற்ற 7 சிக்சர்கள் ஆசிய லெவன் அணிக்காக அடித்திருக்கிறார். இதன்மூலம் டோனி இந்திய அணிக்காக அடித்த 215 சிக்சர் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார்.

    ஒட்டுமொத்தமாக அதிக சிக்சர் அடித்தவர்களில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி (351) முதல் இடத்தில் உள்ளார். டோனி 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×