search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    106 ஓவரிலேயே முடிந்த அரையிறுதி போட்டி: கேரளாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது விதர்பா
    X

    106 ஓவரிலேயே முடிந்த அரையிறுதி போட்டி: கேரளாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது விதர்பா

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் கேரளாவை இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா - நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற விதர்பா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கேரளா முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவின் (7 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 106 ரன்னில் சுருண்டது. பின்னர் விதர்பா முதல் இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய விதர்பா 208 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சந்தீப் வாரியர் ஐந்து விக்கெட்டும், பாசில் தம்பி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் கேரளா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசினார். இதனால் கேரளா ரன்கள் குவிக்க திணறியது. தொடக்க வீரர் அருண் கார்த்திக் 36 ரன்களும், 3-வது வீரர் விஷ்னு வினோத் 15 ரன்களும், ஜோசப் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 24.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 91 ரன்னில் சுருண்டது. உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டும், யாஷ் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனால் விதர்பா இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐந்து நாட்கள் கொண்ட போட்டி ஒன்றரை நாட்களில் வெறும் 106.1 ஓவரிலேயே முடிவடைந்தது.
    Next Story
    ×