search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி: வெறுங்கையோடு திரும்பியது இலங்கை
    X

    டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி: வெறுங்கையோடு திரும்பியது இலங்கை

    ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரிலும் நியூசிலாந்து வெற்றிபெற, இலங்கை அணி வெற்றி இல்லாமல் வெறுங்கையோடு திரும்பியது இலங்கை. #NZvSL
    இலங்கை அணி நியூசிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து 3-0 என வெற்றி பெற்று இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.

    இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    முதல் நான்கு பேட்ஸ்மேன்களான மார்ட்டின் கப்தில் (1), கொலின் முன்றோ (16), டிம் செய்பெர்ட் (2), ஹென்ரி நிக்கோல்ஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து 27 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.



    அதன்பின் வந்த ராஸ் டெய்லர் (33), மிட்செல் சான்ட்னெர் (13), டக்  பிரேஸ்வெல் (44) ரன்களும், ஸ்காட் குகெலெஜின் ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 35 ரன்களும், டிம் சவுத்தி 8 பந்தில் 13 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சமரவிக்ரமாக (0), டிக்வெல்லா (18) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.



    அதன்பின் வந்த குசால் பெரேரா 23 ரன்களும், குசால் மெண்டிஸ் 17 ரன்களும், திசாரா பெரேரா 43 ரன்களும் சேர்த்தனர். திசாரா பேரேரா ஆட்டமிழக்கும்போது இலங்கை 12.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்திருந்தது. 45 பந்தில் 52 ரன்கள்தான் தேவைப்பட்டது. அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 16.5 ஓவரில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் நியூசிலாந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பெர்குசன், இஷ் சோதி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இந்த தோல்வியின் மூலம் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் இலங்கை வெறுங்கையோடு திரும்பியது.
    Next Story
    ×