search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை ஊதித்தள்ளியது வெஸ்ட் இண்டீஸ்- 10.5 ஓவரிலேயே 130 ரன்னை எட்டியது
    X

    முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை ஊதித்தள்ளியது வெஸ்ட் இண்டீஸ்- 10.5 ஓவரிலேயே 130 ரன்னை எட்டியது

    முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 130 ரன் இலக்கை 10.5 ஓவரிலேயே எட்டி, வங்காள தேசத்தை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ். #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வாங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிம் இக்பால். லித்தோன் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 5 ரன்னிலும், லித்தோன் தாஸ் 6 ரன்னிலும், சவுமியா சர்கார் 5 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடி 43 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அவருக்குப்பின்னால் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியே வங்காள தேசம் 19 ஓவரில் 129 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் காட்ரெல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. லெவிஸ், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 11 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை  வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


    நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய காட்ரெல்

    அடுத்து பூரம், கீமோ பால் ஆகியோர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். பூரம் 17 பந்தில் 23 ரன்களும், கீமோ பால் 14 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்களும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரிலேயே 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    55 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது ஆட்டம் 20-ந்தேதி நடக்கிறது. வங்காள தேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 2 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×