search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரமேஷ் பவாரை போல் ரவி சாஸ்திரியை நீக்கி விடுவீர்களா?- மதன் லால் கேள்வி
    X

    ரமேஷ் பவாரை போல் ரவி சாஸ்திரியை நீக்கி விடுவீர்களா?- மதன் லால் கேள்வி

    மிதாலி ராஜ் விவகாரத்தில் ரமேஷ் பவாரை நீக்கியதுபோல், ரவி சாஸ்திரியை நீக்குவீர்களா? என்று மதன் லால் கேள்வி எழுப்பியுள்ளார். #TeamIndia
    வெஸ்ட் இண்டீஸில் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அனுபவம் வாய்ந்த மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.

    அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் காயத்தால் களம் இறங்கவில்லை. அதன்பின் காயம் சரியான பின்பும் அரையிறுதி போட்டியில் களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் விமர்சனம் எழும்பியது. அப்போதுதான் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் மிதாலி ராஜிற்கும் இடையில் இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த விவகாரத்திற்கிடையே, நேற்று முன்தினத்துடன் ரமேஷ் பவாரின் பதவிகாலம் முடிவடைந்தது. அதற்குள் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்நிலையில் இந்திய ஆண்கள் தேசிய அணியில் ரவி சாஸ்திரி ஒரு வீரரை வெளியே உட்கார வைத்துவிட்டார் என்பதற்கு, அவரை பதவியில் இருந்து நீக்கிவிடுவீர்களா? என்று முன்னாள் வீரர் மதன்லால் கேள்வி எழுப்பிள்ளார்.



    இதுகுறித்து மதன் லால் கூறுகையில் ‘‘நீங்கள் பயிற்சியாளரை நீக்கினால், அவர் டம்மியானவர் என வீரர்கள் நினைக்க தோன்றிவிடும். பயிற்சியாளர் அணியின் ஒரு பகுதி. அவருடன் எடுக்கப்படும் முடிவுகளை அணி பின்பற்ற வேண்டும். ரமேஷ் பவார் எப்போதுமே அணி வெற்றி பெற வேண்டும் என்றுதான் விரும்புவார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதில் ஒரு பகுதி. அப்படி இருக்கையில் ரமேஷ் பவார் மற்றும் ஏன் டார்கெட்? செய்யப்படுகிறார். தேர்வாளர்களும் அதில் ஒரு பகுதிதான். பவாரை நீக்கியது தேவையில்லாதது. இப்படிபட்ட விஷயத்தால் ஆட்டம் முன்னோக்கிச் செல்லாது.

    நாளை ரவி சாஸ்திரி யாரவது ஒரு வீரரை வெளியில் உட்கார வைத்துவிட்டா், நீங்கள் அவரை பதவியில் இருந்த நீக்குவீர்களா?. அது நடக்காத விஷயம். பயிற்சியாளர்கள் எப்போதுமே நெருக்கடிக்குள் இருப்பவர்கள்’’ என்றார்.
    Next Story
    ×