search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் எறிப்பந்து- தமிழக அணிகள் 11-ந் தேதி தேர்வு
    X

    தேசிய சீனியர் எறிப்பந்து- தமிழக அணிகள் 11-ந் தேதி தேர்வு

    தேசிய சீனியர் எறிப்பந்து போட்டிகளுக்கான தமிழக ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு சென்னையில் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
    சென்னை:

    40-வது தேசிய சீனியர் எறிப்பந்து போட்டி டிசம்பர் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சண்டிகாரில் நடக்கிறது. 13-வது தென் மண்டல போட்டி பெங்களூரில் டிசம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளிலும், 29-வது பெடரேசன் கோப்பை போட்டி ராஜஸ்தானில் நவம்பர் கடைசி வாரத்திலும் நடக்கிறது.

    இந்த 3 போட்டிகளுக்கான தமிழக ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தூய இருதய பள்ளியில் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் டி.பாலவிநாயகம் தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×