search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஜாரா மெதுவாக விளையாடுவது மற்றவர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும்- மொஹிந்தர் அமர்நாத்
    X

    புஜாரா மெதுவாக விளையாடுவது மற்றவர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும்- மொஹிந்தர் அமர்நாத்

    புஜாரா மெதுவாக விளையாடுவது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று மொஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க திணறி வரும் வேலையில், புஜாரா மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மொஹிந்தர் அமர்நாத் கூறுகையில் ‘‘புஜாராவின் ஆட்ட நுணுக்கம் அவரை நீண்ட நேரம் க்ரீஸில் நிற்க வைக்க உதவுகிறது. என்றாலும், அவர் ரன் அடிக்காமல் அப்படியே நின்று விடுகிறார்.

    அப்போது ஒருமுனையில விக்கெட் விழும்போது, ஸ்கோர்டு போர்டில் ரன் அதிகரிப்பதில்லை. மேலும், விளையாட வரும் அடுத்த பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அடிக்கடி ரொட்டேட் செய்தால் பந்து வீச்சாளர்களை அதிக அளவில் யோசிக்க வைக்க உதவும்’’ என்றார்.
    Next Story
    ×