search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரும் சோகம்- டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-ல் ஏழு முறை ரன்அவுட் ஆகிய புஜாரா
    X

    தொடரும் சோகம்- டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-ல் ஏழு முறை ரன்அவுட் ஆகிய புஜாரா

    இன்றைய ரன்அவுட் மூலம் டெஸ்ட் போட்டியில் புஜாரா 7 முறை ரன்அவுட் ஆகி மிகவும் மோசமான சாதனைக்கு உள்ளாகியுள்ளார். #ENGvIND #Pujara
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.

    மழை விட்டுவிட்டு பெய்ய ஆட்டமும் தடைபட்டு தடைபட்டு நடந்தது. 9-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் புஜாரா அடித்துவிட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது ரன்அவுட் ஆனார். இந்த ரன்அவுட் மூலம் இந்தியா 15 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் மழையால் ஆட்டம் நடைபெறவில்லை. புஜாரா டெஸ்ட் போட்டியில் ரன்அவுட் ஆவது இது முதல் முறையல்ல. இந்திய வீரர்கள் கடைசியாக 10 முறை ரன்அவுட் ஆனதில் 7 முறை புஜாராதான் ரன்அவுட் ஆகியுள்ளார்.



    இதற்கு முன் செஞ்சூரியனில் (2018) நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன்அவுட் ஆனார். அதற்கு முன் இலங்கைக்கு எதிராக தரம்சாலாவில் (2017) ரன்அவுட் ஆகியுள்ளார்.

    2016-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கிங்ஸ்டனில் ரன்அவுட் ஆகியுள்ளார். 2013-ல் ஜோகன்னஸ்பர்க்கில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராகவும், 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தாவிலும் ரன்அவுட் ஆகியுள்ளார்.
    Next Story
    ×