search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் - குரோசியா இறுதிப் போட்டியை 51.2 மில்லியன் இந்திய ரசிகர்கள் பார்த்து சாதனை
    X

    பிரான்ஸ் - குரோசியா இறுதிப் போட்டியை 51.2 மில்லியன் இந்திய ரசிகர்கள் பார்த்து சாதனை

    பிரான்ஸ் - குரோசியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இந்தியாவில் மட்டும் 51.2 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குரோசியா முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடம் தொற்றியிருந்தது.

    அந்த ஆர்வம் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் ஜூலை 15-ந்தேதி இரவு பெரும்பாலான ரசிகர்கள் சோனி சிக்ஸ் சேனலை விட்டு விலகவில்லை. இந்த போட்டியை 51.2 மில்லியன் இந்தியர்கள் பார்த்து ரசித்ததாக ஒளிப்பரப்பு செய்து சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முன்பைவிட மிக அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.



    64 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஒட்டுமொத்தமாக 254 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இதில் 110.5 மில்லியன் மக்கள் லைவ்-ஆக பார்த்துள்ளனர். மேற்கு வாங்காளத்தில் இருந்து 22.2 மில்லியனும், கேரளாவில் இருந்து 17.8 மில்லியன் ரசிகர்களும் பார்த்துள்ளனர்.
    Next Story
    ×