search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் வளர்ச்சிக்கு டங்கன் பிளட்சர் முக்கிய காரணம்- கேரி கிர்ஸ்டன்
    X

    இந்திய அணியின் வளர்ச்சிக்கு டங்கன் பிளட்சர் முக்கிய காரணம்- கேரி கிர்ஸ்டன்

    இந்திய அணி சிறப்பான வகையில் இளம் வீரர்களால் மாற்றமடைய டங்கன் பிளட்சர் முக்கிய காரணம் என கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரர் கேரி கிர்ஸ்டன். இவருக்குப்பின் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார். இவர் நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.

    இவர் பதவி ஏற்றபோது இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், லஷ்மண், சேவாக், ஜாகிர்கான் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறிய நேரம். அந்த நேரத்தில் இளைஞர்களை கொண்டு இந்திய அணியை ஸ்மூத்தாக மாற்றிய பெருமை டங்கன் பிளட்சருக்கு உண்டு என கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘இந்திய அணியில் இளம் வீரர்கள் வளர்ச்சியடையக் கூடிய சூழ்நிலையை டங்கன் பிளட்சர் மற்றும் கேப்டன் டோனி உருவாக்கினார்கள் என்று நினைக்கிறேன். சர்வதேச போட்டியில் துன்பங்கள் மற்றும் சோதனைகளை எப்படி கையாள்வதற்கு இது உதவியாக இருந்தது’’ என்றார்.
    Next Story
    ×