search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்மிண்டன் அணியின் சாம்பியன் அஸ்வினி பொன்னப்பா- கோபிசந்த் புகழாரம்
    X

    பேட்மிண்டன் அணியின் சாம்பியன் அஸ்வினி பொன்னப்பா- கோபிசந்த் புகழாரம்

    காமன்வெல்த்தில் பேட்மிண்டன் கலப்பு அணியில் இந்தியா தங்க பதக்கம் வெல்ல முக்கிய காரணம் அஸ்வினி பொன்னப்பா என கோபிசந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் 21-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது. பேட்மிண்டன் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கமும், கலப்பு அணிகள் தங்கமும் பெற்றனர். ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் ஒற்றையரில் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

    பேட்மிண்டன் அணிக்கு கோபிசந்த் பயிற்சியாளராக இருந்தார். கலப்பு அணிகள் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா அணி சாம்பியன் என்று கோபிசந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.



    இதுகுறித்து கோபிசந்த் கூறுகையில் ‘‘காமன்வெல்த் தொடரில் 10 நாட்களும் அஸ்வினி பொன்னப்பா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நாளைக்கு நான்கு போட்டிகள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    என்னைப் பொறுத்தவரையில் இந்த தொடரில் சாம்பியன் அஸ்வினி பொன்னப்பாதான். மலேசியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் அஸ்வினி பொன்னப்பாவின் முதல் ஆட்டம் சூப்பர். இதுதான் தங்கம் வெல்வதற்கு முக்கியத்துவமாக அமைந்தது. அவருக்கு சல்யூட்’’ என்றார்.
    Next Story
    ×