search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியாமி ஓபன் தொடரின் 2-வது சுற்றில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
    X

    மியாமி ஓபன் தொடரின் 2-வது சுற்றில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

    அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். #MiamiOpen #RogerFederer #ThanasiKokkinakis

    மியாமி:

    அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகதரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 177-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தனசி கொக்கினாகிஸ் உடன் மோதினார்.

    இப்போட்டியின் முதல் செட்டை பெடரர் 6-3 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய வீரர், அந்த செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.



    இதையடுத்து வெற்றி தீர்மானிக்கும் இறுதி செட்டில் இரு வீரர்களும் அதிரடியாக விளையாடினர். ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமால் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய வீரர் 7-6 (7-4) என மூன்றாவது செட்டை கைப்பறினார். இதன்மூலம் 3-6, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற தனசி கொக்கினாகிஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இப்போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து இத்தொடரை விட்டு வெளியேறினார். #MiamiOpen #RogerFederer #ThanasiKokkinakis #tamilnews
    Next Story
    ×