search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்களின் மோசமான நடவடிக்கைக்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம்
    X

    வீரர்களின் மோசமான நடவடிக்கைக்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம்

    இலங்கைக்கு எதிரான கடைசி லீக்கில் வங்காள தேச வீரர்கள் நடந்து கொண்ட செயலுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #SLvBAN
    நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காள தேச அணிகள் மோதின. அரையிறுதிக்கு நிகரான இந்த ஆட்டத்தில் வங்காள தேச அணயின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இலங்கை வீரர்கள் வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகள் பவுன்சராக சென்றதால் வங்காள தேச வீரர்கள் நோ-பால் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    உச்சகட்டமாக வங்காள தேச வீரர்களின் டிரெஸ்ஸிங் அறையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நுருல் ஆகியோருக்கு அபாரம் விதிக்கப்பட்டது. வங்காள தேச வீரர்களின் செயல்பாடுகள் கிரிக்கெட் தொழில்முறைக்கு உகந்ததல்ல என்று வங்காள தேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து நஸ்முல் ஹாசன் கூறுகையில் ‘‘இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வங்காள தேச வீரர்களின் செயல்பாடுகள் விளையாட்டின் தொழில்முறைக்கு உகந்தது அல்ல. அவர்களின் பழக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பவம் குறித்து வங்காள தேச வீரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

    இதற்கிடையே இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளதால் வங்காள தேச வீரர்கள் மற்றும் அனைவருக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்றால் இது அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
    Next Story
    ×