search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கென்யா கிரிக்கெட் அணியின் கேப்டன், பயிற்சியாளர், தலைவர் ராஜினாமா
    X

    கென்யா கிரிக்கெட் அணியின் கேப்டன், பயிற்சியாளர், தலைவர் ராஜினாமா

    உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான டிவிஷன்-2 தொடரில் மோசமாக விளையாடியதால் கென்யா அணியின் கேப்டன், பயிற்சியாளர், தலைவர் ராஜினாமா செய்துள்ளனர்.
    இங்கிலாந்தில் அடுத்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் தானாகவே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிடும். மற்ற இரண்டு அணிகள் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வாகும். இந்த தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான டிவிஷன் லெவன் தொடர் நடைபெற்றது.

    கென்யா அணி 2-வது டிவிஷனில் இடம்பிடித்திருந்தது. 2-வது டிவிஷன் தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட கென்யா அணியால் வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிராக 218 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல், 2-வது டிவிஷனில் இருந்து 3-வது டிவிஷனுக்கு சென்றுள்ளது

    இதனால் கென்யா கிரிக்கெட் வாரியத் தலைவர், கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
    Next Story
    ×